Monday, September 23, 2013

நையாண்டி பவன் – சங்கவி


சில்லென சில்லென நீர்த்துளி பட்டு... மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு... பாடிக்கொண்டே நையாண்டி பவன் சமையலறைக்குள் நுழைகிறார் செந்தில்.

கவுண்டமணி: ஆமா இவரு பெரிய பாகவதரு ! பாட்ட நிறுத்துடா படுவா !!

செந்தில்: அண்ணே... நான் சொல்ற விசயத்த கேட்டா நீங்க பாடுறது மட்டுமில்லாம ஆடவும் செய்வீங்க.

க: நான் ஆடுறது இருக்கட்டும். மொதல்ல நீ ஆடாம விஷயத்த சொல்லுடா !

செ: நம்ம ஹோட்டலுக்கு சங்கவி வந்திருக்காங்க.

க: ஆஹா ! நம்ம டாகுட்டர் முதுகு தேய்ச்சி விடுவாரே அந்த சங்கவி தானே... வாடா போயி பாக்கலாம்.

பேச முனையும் செந்திலை பேசவிடாமல் அவசரப்படுத்தி அழைத்துச்செல்கிறார் கவுண்டமணி.

சங்கவி முதுகு மட்டும் தெரியும்படி அமர்ந்திருக்கிறார்.

க: ஆஹா இதுவல்லவா முதுகு. டேய் மண்டையா ஒரு லோடு சோப்பு வாங்கிட்டு வா. இன்னைக்கு பூரா நான் தேய்க்கணும்.

செ: அண்ணே ???

க: என்ன அண்ணே நோன்னேன்னுக்குட்டு ! படுவா தள்ளி நில்லுடா !!

கவுண்டமணி சங்கவியின் முதுகை தடவிக்கொண்டே சங்கவியின் முகத்தை திருப்பிப் பார்க்கிறார்.

க (அதிர்ச்சியாகி செந்திலை உதைத்தபடி): டேய் காலிபிளவர் தலையா ! இவனைத்தான் சங்கவி வந்திருக்கான்னு சொன்னியா. இத ஏண்டா நீ மொதல்லயே சொல்லலை.

செ: அண்ணே. நீங்க எங்கண்ணே சொல்ல விட்டீங்க !

க: செய்யுறத செஞ்சிட்டு மூஞ்சியை வச்சிருக்குறத பாரு, நயாபைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதவன் மாதிரி. இப்ப இந்த நாயிக்கு என்னடா வேணுமாம்.

செ: அண்ணே. நம்ம சங்கவி அண்ணன்...

க: அடேய் தயிர்வடை வாயா ! அவன் அண்ணன்னா அப்பா நான் யாருடா ?

செ: சூ குறுக்குல பேசக்கூடாது. அண்ணன் கவிதை புக்கு வெளியிட்டிருக்காரு. அதை உங்ககிட்ட படிச்சு காட்டிட்டு போலாமுன்னு வந்திருக்காரு.

க: எங்க ? அந்த கவிஞ்சரு மூஞ்ச கொஞ்சம் காட்டச்சொல்லு. அய்யா கவிஞ்சரே படிச்சுக் காட்டிட்டு நீங்க போயிடுவீங்க. நாங்க எங்க போறது ?

சங்கவி: அதெல்லாம் முடியாதுண்ணே நான் படிச்சு காட்டிட்டுதான் போவேன்.

க (காதை பொத்தியபடி மனதிற்குள்): அய்யோ கரிச்சட்டி தலையன் படிச்சு காட்டாம விடமாட்டான் போலருக்கே.

க: சரி படிச்சுத் தொலை !

சங்கவியின் கவியரங்கம் ஸ்டார்ட்ஸ்...

சங்கவி:
உன் பேரைக்
கவிதையாய் எழுதுவேன்,
ரசிப்பேன்,
மீண்டும் படிப்பேன்,
ஆனால் வெளியே சொல்லமாட்டேன்
ரகசியக் காதலியை
எப்படிச் சொல்வது ?

க: படுவா அதென்ன ரகசியக்காதலி ? கள்ளக்காதலி’ன்னு சொல்லித் தொலையேன்டா ! ஆமாம், இத வெளிய வேற சொல்லுவியா. அவ புருஷன்காரன் பொளந்துறமாட்டான் ?

சங்கவி:
உன்னை நினைத்து
கவிதை எழுத
கணிப்பொறி முன்
உட்கார்ந்து யோசிக்கும்
போது கூடவே
மனைவியும் உட்கார்ந்து
என்ன யோசனை
என்கிறாள்.

க: ஆங் இவரு பெரிய்ய பூகோள ஆராய்ச்சியாளரு ! சொறி புடிச்ச மொண்ணை நாயி கணிப்பொறிக்கும் எலிப்பொறிக்கும் வித்தியாசம் தெரியாம மசால்வடையை மொறச்சி பார்த்தா அப்படிதான்டா கேப்பாங்க.

சங்கவி:
உன்னை நினைக்காமல்
ஒரு நாளும்
இருந்ததில்லையடி
நான் மட்டும் நினைத்து
என்ன பயன் ?
உனக்கு என் நெனப்பிருக்கா ?
சொல்லு புள்ள

க: டேய் ! இப்ப எதுக்கு நீ சொல்லு புள்ள’ன்னு கேப்டன் மாதிரியெல்லாம் மிமிக்ரி பண்ணி காட்டுற. இவரு அப்படியே ஹாலிவுட் ஹீரோ டாம் க்ருஸு இவரைப்பத்தியே நெனச்சிக்கிட்டிருக்காங்க. அதை வேற சொல்லணுமாம். மொதல்ல உன்னையெல்லாம் கொல்லணும்டா.

சங்கவி:
உன் சிரிப்பினில்
சிரிப்பினில்
மேலே எழுத முடியலைடி
கற்பனையிலே
எனை கவிழ்த்தவளே

க: அடேய் ஆமைவடை தலையா அதுக்கு மேல இல்லை, நீ எழுதுன ரெண்டு வரியே ஏற்கனவே தாமரையக்கா எழுதுனது தான். புதுசா ஏதாவது எழுதுங்களேன்டா.

சங்கவி:
செல்லச் சிணுங்கல்
மிதமான சிரிப்பு
பார்க்கத் தூண்டும் கண்கள்
கடிக்கத் தூண்டும் உதடு
இது எதுவும் உன்னிடம்
எனக்கு பிடிக்கவில்லை
எனக்கு பிடித்ததெல்லாம்
உன் திமிர் தான்

க: ஏது உனக்கு ? படுவா ஏதோ ஒரு ஃபேக் ஐடி ஃபிகருகிட்ட சாட் பண்ணி செம மாத்து வாங்கியிருக்க. வாங்குனதுக்கு அப்புறமும் அவ திமிரு பிடிச்சிருக்கு, குமிரு பிடிச்சிருக்குன்னு பசப்புற. மவனே டேய். அடுத்தத வாசி.

சங்கவி:
என்னவளின் இடையும்
என் கவிதையும்
சிக்கென்று இருக்கும்

இரண்டையும்
அனுபவித்து ரசிக்க வேண்டும்
ஆராயக்கூடாது

க: எனக்கு ச்சீ’ன்னு இருக்குதுடா ! அந்த பொண்ணுக்கு ஒன் கவிதையை படிக்க குடுத்திருப்ப. வயித்தாலயும் வாயாலயும் போனா சிக்குன்னு தாண்டா இருக்கும் சிக்கன் 65 மண்டையா !

சங்கவி:
என்னவள்
அழகு என்று
சொல்லிட முடியாது
இல்லை என்று மறுக்கவும்
முடியாது.

க: டேய் கவிதையை சொல்லுடான்னா என்னடா அறிக்கை வுடுற. அட்டு ஃபிகரை வச்சிக்கிட்டு இதுக்கு லொள்ள பாத்தியா ? எகத்தாளத்த பாத்தியா ?

சங்கவி:
சைவமாக
இருக்க வேண்டும்
என்றுதான் வருவேன்
உன்னை நெருங்கி
உன் சுவாசத்தை
சுவாசிக்கும்போது
அசைவமாக
மாறி விடுகிறேன்.

க: ஏன் அந்த பொண்ணு வீட்டுல கருவாட்டு கொழம்பு சாப்டுட்டு வந்துச்சாக்கும். லவ்வு பண்ணுங்கடா வேணாங்கல. அதை கொஞ்சம் பல்ல வெளக்கிட்டு பண்ணுங்களேன்டா.

சங்கவி:
எனக்கு
எழுத வராது
என்று தெரிந்தும்
கவிதை எழுதச்
சொல்கிறாய்,
அடியேய்
உன் இதழ்
என் இதழுடன்
எழுதிய அளவிற்கு
கவிதை எழுத வராது.

க: ஒனக்கு எழுத வராதுங்குறது தான் நீ சொல்ற கவிதையை கேட்டாலே தெரியுதேடா. அதை வேற ஒன்னின் கீழ் ஒன்னு போட்டு ஒரு பக்கத்த ரொப்பிட்டியா ?

சங்கவி:
உன்னைப் பார்க்க
பேச... கொஞ்ச...
சண்டை போட...
சத்தியமாக ஆசை இல்லை...

க: டேய் என்னதிது ?

சங்கவி: கவிதைங்ணா.

க (செந்திலிடம்): டேய் மசால்தோசை வாயா !

செ: சொல்லுங்கண்ணே.

க: அடுப்படியில ஒரு தாடிக்காரன் ஒளிஞ்சிருப்பான் அவன வரச்சொல்லு !

உள்ளிருந்து தண்டோரா போட்டபடி மணிஜி வர, தலைதெறித்து ஓடுகிறார் சங்கவி !!!

24 comments:

sathishsangkavi.blogspot.com said...

மொத ஓட்டு என்னுது தான்....

aavee said...

//லவ்வு பண்ணுங்கடா வேணாங்கல. அதை கொஞ்சம் பல்ல வெளக்கிட்டு பண்ணுங்களேன்டா.//

ஹஹஹா.. என்ன மாம்ஸ்.. கிழி கிழின்னு கிளிச்சுட்டீங்களே!! செம்ம..

Unknown said...
This comment has been removed by the author.
அஞ்சா சிங்கம் said...

நீங்க யாரும் டென்சன் ஆகாதீங்க . நாங்க இப்படிதான் ரொம்ப திக் பிரண்ட்ஸ் . அப்ப அப்ப நாங்க அவரை கேவலமா பேசுறதும் . பதிலுக்கு அவரு எங்களை ரொம்ப கேவலமா பேசுறதும். இதை நாங்க ஜாலியாவே எடுத்துகிறது ......

Unknown said...

ஹ ஹா ஹா..... சங்கவி சதீஷை இப்படி கிண்டல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம் ! (அவ்வளவுதானா பதிவு, இல்லை அடுத்த பார்ட் வருதா )


- சங்கவி சதீஷ் கவிதை சங்கம் மெம்பர்


சதீஷ், கொடுத்த காசுக்கு ஓவரா கூவிடேனோ....!!

Sivakumar said...

யோவ்...அந்த புக்க எனக்கு அனுப்புங்கய்யா!!

Anonymous said...

கவிஞர் சங்கவி கவிதைகளின் வெறியர்கள் பேரவையின் சார்பாக சங்கவியை சுமாராக ஓட்டியதை வன்மையாக கண்டிக்கிறோம்

Sivakumar said...

இதுவே சுமாரா??

Sivakumar said...

"நீங்களும் பொஸ்தகம் போட மாட்டீங்க. மத்தவங்க எழுதுனாலும் சும்மா இருக்க மாட்டீங்க. பொறாம புடிச்ச பசங்க. உங்களையெல்லாம் 16 வயதினிலே காந்திமதி டைப்ல திட்னாதான்டா சரிப்பட்டு வருவீங்க. ரேஸ்கல்ஸ்"

பொஸ்தகம் போடுவோர் ஒளிவட்ட ஸ்தாபனம்,
மாமா அமானுஷ்ய புத்திரன் முதல் சந்து,
மதராஸ்.

ராஜி said...

வித்தியாசமான புத்தக விமர்சனம். ஆனா, ரசிச்சு படிச்சேன்

திண்டுக்கல் தனபாலன் said...

நான் வேண்டுமென்றால் மாற்றி வாசிக்கவா...?

கேரளாக்காரன் said...

ROFL MAXXXXXXXXXXXXXXXXXXXXXX :)

sathishsangkavi.blogspot.com said...

மச்சிகளே...

ரொம்ப கம்மியா ஓட்டிட்டீங்கப்பா... இன்னும் எதிர்பார்க்கிறேன்... நண்பர்கள் ஓட்டுவதை நான் மிக ரசிப்பேன்.. அதைப்போலத்தான் இந்த பதிவும் ரசித்தது மட்டுமல்லாமல் என் முகநூலிலும் பகிர்ந்து என் நண்பர்களை படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறேன் என்பதை.. பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்...

இன்னும்...

சிவா உங்களுக்கு ஒரு காப்பி இன்று கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்.. நீங்களும் கழுவு கழுவு ஊத்துங்க....

sathishsangkavi.blogspot.com said...

மச்சிகளே...

ரொம்ப கம்மியா ஓட்டிட்டீங்கப்பா... இன்னும் எதிர்பார்க்கிறேன்... நண்பர்கள் ஓட்டுவதை நான் மிக ரசிப்பேன்.. அதைப்போலத்தான் இந்த பதிவும் ரசித்தது மட்டுமல்லாமல் என் முகநூலிலும் பகிர்ந்து என் நண்பர்களை படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறேன் என்பதை.. பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்...

இன்னும்...

சிவா உங்களுக்கு ஒரு காப்பி இன்று கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்.. நீங்களும் கழுவி கழுவி ஊத்துங்க....

Ponmahes said...

அருமை....வாழ்த்துக்கள்....

கார்த்திக் சரவணன் said...

ஹா ஹா ஹா... செம்ம கலாய்ப்பு... கடைசி கவிதை கலக்கல்....

Manimaran said...

ஹா..ஹா... டோட்டல் டேமேஜ்.... அண்ணே.. அந்த கவிதை புக் எங்க கிடைக்கும்...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏம்பா சங்கவின்ற பேருக்காவது நம்ம சங்கவி படத்த போட்டிருக்க வேணாமா?

”தளிர் சுரேஷ்” said...

பாவம்பா சங்கவி! இந்த ஓட்டு ஓட்டறீங்களே! ஹா! ஹா! ஹா!

நாய் நக்ஸ் said...

ஹலோ..பிரபா ஒயின்ஸ்சா...???

கடை எப்ப சார் திறப்பீங்க...????

வெளங்காதவன்™ said...

Yov. Andha bothtoom ottai uengayaa?

bandhu said...

இகழாமல் கிண்டல் செய்வது தனி கலை. அது உங்களுக்கு கை வரவில்லை.

கோகுல் said...

இவ்விடம் சிறந்த முறையில் புத்தகங்களுக்கு விமர்சனம் செய்யப்படும்!!!

பாமரன் said...

அருமையான தளம். நான் தங்கள் தளத்தின் பின்தொடர்பவர்கள் பகுதியில் இணைகிறேன். என் தளம்

தமிழ்மொழி.வலை ( www.thamizhmozhi.net )