Friday, December 14, 2012

பட்டிக்காட்டான் ஜெய் கதைகள் 3


திருவாளர் பட்டிஸ் ஒரு கருமிங்கறது நம்ம பூமியையும் தாண்டி செவ்வாய், வியாழன் வரைக்கும்  தெரியும், "எச்சக் கையில குருவி கூட ஓட்டமாட்டாப்ல...!" என்பது அனைவருக்கும் தெரியும். வீட்டுல பிளஸ்ல எகத்தாளம் பேசுற மாதிரியே…பேச சோத்தைக் "கட்" பண்ணிட்டாங்க…!இவருக்கு கொல பட்டினி வேற சரி நைசா ஹோட்டல்ல போய் சாப்பிட்டுக்கலாம்ன்னு கிளம்புறார். "நானே ராஜா நானே மந்திரி .."அப்படின்னு பாட்டுப் பாடிட்டு ரோட்டுல அலம்பிக்கிட்டு வர்றார் ஆட்டோக்காரன் ஓருத்தர் வண்டிய நிறுத்தி சார் வண்டி வேனுமா..? அப்படிங்கிறார்…!

"இல்லப்பா செகன்ட் ஹேன்ட் வண்டி நான் வாங்குறதில்லை..! " அப்படின்னு நக்கல் பேச…."போய்யா சாவு கிராக்கி பன்னாடை..., பரதேசி, அப்படின்னு திட்டிட்டு போறான்…!

வழக்கமா நாமதானே திட்டுவோம் இவம் திட்டுறான்…! சரி ஒரு லைக்கப் போட்டுருவோம் அப்படின்னு "லைக்......லைக்......" அப்படின்னு கத்தறாரு..! அப்ப அந்தபக்கம் பால்கனியில் இருந்து குப்பை கொட்ட வந்த "ஆன்ட்டி"  யாரைப் பாத்து லைக்குங்கற ராஸ்கல் அப்படின்னு குப்பைய இவர் தலையில கொட்டிட்டு போயிருச்சு…! இன்னிக்கு நாம ஸ்டேட்டஸ் போட்ட நேரம் சரியில்ல போல அப்படின்னு புலம்பிக்கிட்டு வர்றார் ஒரு ஹோட்டல் கண்ணுல படுது உள்ள நுழையறார்.

ஹோட்டல்க்குள்ள இவர் உள்ள நுழைஞ்ச நேரம் பாத்து  அங்க ஏற்கனவே சிவாவும், நக்கீரனும் இருக்காங்க…..இவரும் போயி அவங்க இருந்த டேபிள்ல உக்காறாரு……! எதாவது ஆர்டர் பண்ணுவாய்ங்க நாம ஓசில சாப்பிட்டுக்கலாமின்னு பாக்கறாரு அவங்க அதைப் பத்தியே பேசலை…! இவருக்கு கொலைப்பட்டினி மெதுவா சிவா சாப்பிடலாமே அப்படின்னு பிட்ட போடுறாரு

"ஓ….சாப்பிடலாமே…! பில்லு நீங்க கொடுங்க" அப்படினாப்டி…!சிவா!

"இது என்னடா வம்பாப் போச்சுன்னு"  யோசனை செய்த பட்டிஸ் முழிச்சிட்டு இருக்கையில…..அப்ப பாத்து ஆருர் முனா வர்றாப்ல ஹோட்டல்ககுள்ள….! அவரும் ஒரு சேர்ல உக்காந்துட்டு "ஏம்பா என்ன ஆர்டர் பண்ணயிருக்கீங்க…?" அப்படின்னு கேட்க "ஒன்னும் பண்ணல யாரு இன்னிக்கு வாங்கி தருவதுன்னு டிஸ்கஷன் பண்ணிட்டு இருக்கோம் அப்படிங்கிறாரு நக்கீரன்..!" 

சிவாகிட்டியும், எங்கிட்டியும் காசு இல்ல…..நீங்க இரண்டு பேர்ல யாராவது ஆர்டர் பண்ணுங்க என்கிறார்…..நக்கீரன்! ஆருர் மூனா சரி நான் நக்கீரனுக்கு பில் கொடுக்கிறேன் பட்டி சிவாவுக்கு பில் பண்ணட்டும் அப்படிங்க உடனே பட்டிஸ் சிவா நீ என்ன சாப்பிடுவே….? அப்படின்னு கேட்குறாரு…..!நான் என்னங்க சாப்பிடுவேன் இரண்டு இட்லி, இரண்டு ரோஸ்ட், ஒரு காப்பி, ஒரு வடை அவ்வளவுதான் அப்படிங்கிறாப்ல…!

அடுத்ததா நக்கீரனை கேட்குறாப்ல….நான் என்னய்யா டயட்ல இருக்கிறேன் எதா இருந்தாலும் ஒன்னுதான் சாப்பிடுவேன் அப்படிங்கறாப்ல…..! பட்டியின் கணக்கு பூச்சி மூளை அதிசயமா அன்னிக்குன்னு பார்த்து வேலை செய்யுது ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து நாலு A4 ஷீட் வருகிற அளவுக்கு கணக்க எழுதி பார்த்துட்டு சிவாவை விட நக்கீரனுக்கு பில்லு குறைவா வருன்னு விடை சொல்ல……..நான் நக்கீரனுக்கு பில் தர்றேன்னு அடம் பிடிக்க……ஆரம்பிச்சாரு…! ஆருர் மூனா மறுத்தாலும் பிறகு சரி என்று சொல்ல நால்வரும் சாப்பிட்டார்கள்….! பட்டி தன் மொபைல்ல பிளஸ்க்கெல்லாம் லைக் போட்டுட்டே சாப்பிடுறாரு....!சாப்பிட்டு முடிச்சதும் நக்கீரன் சாப்பிட்ட பில்லப் பார்த்து பட்டிஸ் மயக்கம் போட்டு விழுந்திட்டாப்ல….பில்ல எடுத்துப் பார்த்தா…..!
இட்லி-1
பூரி -1
புரோட்டா -1
வடை-1
பொங்கல்-1
ஜிலேபி-1
குலோப் ஜாமுன்-1
கிச்சடி-1
ரோஸ்ட்-1
தயிர் வடை-1
சாம்பார் வடை -1
லெமன் சாதம்-1
ஆப்பிள் ஜூஸ் -1
காப்பி-1
டீ-1
பாதாம் பால்-1
மசாலா பால்-1
பீடா-1
---------------------------------------------
நீதி : ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது!

Friday, December 7, 2012

பட்டிக்காட்டான் ஜோக்ஸ் - 2

பட்டிக்காட்டான் ஜெய்யின் தத்துவம் நம்பர் 1
கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன் ,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன் ,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன் ,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன் …

--------------------------------------------------------

டாக்டர் : நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் .
பட்டிக்காட்டான் : அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் .

--------------------------------------------------------

பட்டிக்காட்டான் சிறுவயதில் அவரது பள்ளித் தலைமையாசிரியடம் இப்படிக் கேட்டு தான் பின்னாடி பழுக்க அடி வாங்கினாராம்

சார் , டீ மாஸ்டர்டீ போடறாரு , பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு , மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு , நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க ?..

--------------------------------------------------------


பட்டிக்காட்டான் : ஒரு காப்பி எவ்வளவு சார் ?

மெட்ராஸ்பவன் ஓனர் : 6 ரூபாய் .

பட்டிக்காட்டான் : எதிர்த்த கடையில ஒரு ரூபாய்ன்னு எழுதியிருக்கே ?

மெட்ராஸ்பவன் ஓனர் : டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !

--------------------------------------------------------

வீடு சுரேஷ் : ஏன் மச்சி உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

பட்டிக்காட்டான் : எங்க ஆபீஸ்ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

--------------------------------------------------------
ஒரு நாள் நம்ம பட்டிக்காட்டான், சின்னதா ஒரு டிவி வாங்கனும்ன்னு ஆசை பட்டு, எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு போயிருக்கார். கடைகாரனைப் கூப்பிட்டு ஒரு சின்ன டிவியை காண்பிச்சு கேட்டார்.

"இந்த டிவி என்ன விலை?"

கடைகாரன் பட்டிக்காட்டானை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னான்

"இந்த கடையில பட்டிக்காட்டானுக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

எப்படியும் இந்த டிவியை வாங்கிடனும்னு, விட்டுக்கு போய் தன்னோட கெட்அப்பை மாதிக்கிட்டு வந்து ‌கடைகாரனைப் பார்த்து கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"இந்த கடையில பட்டிக்காட்டானுக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..." ம‌றுப‌டியும் அதையே க‌டைகார‌ன் சொல்ல‌, டென்ஷனான பட்டிக்காட்டானுக்கு என்ன செய்றதுன்னு தெரியலை. ந‌ம்ம திருட்டு முழி தான் இவனுக்கு காட்டிகுடுக்குதுன்னு நினைச்சு, அடுத்த முறை போகும் போது, கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு, ஒட்டு மொத்த கெட்அப்பும் மாத்திக்கிட்டு கடைக்கு போய் கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"ஒரு தடவை சொன்னா புரியாது? இந்த கடையில பட்டிக்காட்டானுக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

பட்டிக்காட்டானால‌் பொறுக்க‌ முடிய‌லை, கடைகாரன்கிட்ட பரிதாபமா கேட்டார்,

"டிவி குடுக்க‌லைன்னா ப‌ர‌வாயில்லை, அட்லீஸ்ட், நான் பட்டிக்காட்டான் தான்னு எப்ப‌டி க‌ண்டுபிடிச்சே சொல்லு?"

கடைகாரன் சிரிச்சிக்கிட்டே சொன்னான், "இது டிவி இல்லை, மைக்ரோஓவ‌ன் அதான்"

--------------------------------------------------------

பட்டிக்காட்டான் அவருடைய ஆட்டோவின் சக்கரங்களை மிக மும்முரமாக கழட்டுவதில் ஈடுபட்டிருந்தார். அவரைப்பார்த்து ஒருவர்,"எதுக்கு ஆட்டோ சக்ககரத்தை கழட்டிக்கிட்டு இருக்கீங்க?"
பட்டிக்காட்டான் : போர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க.'Parking for Two Wheelers only!'.அதுக்குதான் 

--------------------------------------------------------

பட்டிக்காட்டான் வேலை தேடிக் கொண்டு இருந்த போது ஒரு சாப்ட்வேர் கம்பனி நேர்முக தேர்வில்

தேர்வாளர்: "உங்களுக்கு MS Office தெரியுமா?"
பட்டிக்காட்டான் : "நீங்க அட்ரெஸ் குடுதீங்கனா கண்டிப்பா கண்டுபிடிச்சிடுவேன்" 

--------------------------------------------------------

ஒரு வகுப்பில் ஆசிரியர் மாணவர்களை "CRICKET MATCH" பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னார். மாணவர்களும் உடனே எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வகுப்பில் இருந்த பட்டிக்காட்டான் நீண்ட நேர யோசனைக்குப்பிறகு இப்படி எழுதினார் "DUE TO RAIN, NO MATCH!"

--------------------------------------------------------

பட்டிக்காட்டான் கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றுகொண்டிருந்தார்.
அவரைப்பார்த்து அவரின் நண்பர்  " கண்ணாடி முன்னே கண்ண மூடிட்டு என்ன செய்றீங்க" என்று கேட்க, பட்டிக்காட்டான் " நான் தூங்கறப்ப எப்படி இருப்பேன்னு பாத்துகிட்டிருக்கேன்" என்று பதிலளித்தார்!!!



ஆரூர் மூனா செந்தில்

Thursday, December 6, 2012

பட்டிக்காட்டான் ஜெய் கதைகள் - 1

     
                                                               
                                         
நம்ம ப.காவுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு...!சாமியாரா போயிறலாம்ன்னு முடிவு செய்து நித்திகிட்ட போய் சுவாமி நான் சாமியார் ஆகப் போறேன் உங்க ஆலோசனை வேண்டும் அப்படிங்கிறார்...!

நித்தியும் ரஞ்சியையும் தன் சிஷ்யைகளையும் கண்ணால் ஜாடை காட்டி வேறு ஒரு அறைக்குப் போகுமாறு ஜாடை காட்டுகின்றார்....!

கவலைப்படாதிங்க சுவாமிஜி...! உங்க ஆளுகளை யாரையும் நான் தள்ளிட்டுப்
போகமாட்டேன்! தனியா நான் கடை போட்டுக்கிறேன்! அப்படிங்கிறார் நம்ம ப.கா.

நிம்மதி பெருமூச்சு விட்ட நித்தி! குழந்தாய்! யார் வந்தாலும் “உன்னிடம் அதிகம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடு” அப்படின்னு இதையேச் சொல்லு...!போதும் என்கின்றார்...!

நம்ம ப.காவும் தனியா கடை போட்டு உன்னிடம் அதிகம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடு என்று சொல்ல பெரிய லட்சாதிபதி ஒருவன் ப.காவை பார்க்க வர, அவனிடமும் பகா இதையே சொல்ல, அவன் தன்னிடம் இருந்த அதிக சொத்துகளை தானம் தர்மம் செய்ய “காக்காய் உக்கார கள்ளு சட்டி கையில விழுந்த மாதிரி” விரைவில் அவன் கோடீஸ்வரன் ஆகிவிட்டான். ப.காவின் புகழ் பயங்கரமாக பரவ ஆரம்பித்தது. கூட்டம் அதிகம் வர ப.கா மாற்றமே இல்லாமல் இதையே அனைவரிடமும் கூறிக்கொண்டிருந்தார்.

ஒரு முறை பயங்கர ரவுடி ஒருவன் ப.காவைப் பார்க்க வந்தான். சுவாமி பட்டிஸ் எனக்கு நாலு மனைவிகள் என்னால சமாளிக்க முடியலை என்ன செய்வது? என்று கேட்டான் பட்டிஸ் என்ன சொல்லியிருப்பார்ன்னு உங்களுக்கே தெரியுமே...! அதன் பிறகு ரவுடிகிட்ட எவ்வளவு வாங்கியிருப்பார்ன்னும் உங்களுக்குத் தெரியும்..!

நீதி : தவறான குருவை தேர்ந்தெடுப்பவன் தவறான தொழிலையே செய்வான்..!
*********************************************************************************

                                                           
பட்டிக்காட்டான் ஒரு நாள் ரோட்டுல ஜாலியா வந்திட்டு இருந்தாப்ல.....அப்ப ஒரு ஹோட்டல்காரர் வாங்க தம்பி அப்படின்னு கையப்பிடிச்சு ஹோட்டலுக்கு உள்ள இழுத்திட்டுப் போயி ஒரு தட்டுல சாம்பார் வடைய வெச்சு சாப்பிடுங்க தம்பின்னு அன்ப பொழிஞ்சார்...!

வேணாங்க எங்கிட்ட காசு இல்ல அப்படினாப்டி ப.கா

நான் உங்க கிட்ட காசு கேட்டனா....? நீங்க சாப்பிடுங்க தம்பி அப்படினாப்டி..ஹோட்டல்காரர்! ப.காவுக்கு இவம் யாராவது பதிவரா இருப்பானோ..?என்று நினைச்சுட்டு சாம்பார் வடை ஓசில கிடைச்ச சந்தோசத்துல சந்தோசமா சாப்பிடறாரு...!முடிச்சதும் டீ கொடுக்கறார் அதையும் குடிச்சிட்டு வெளிய வந்து ப.கா அவரிடம் சார் என் மேல அன்பை பொழியிறிங்களே நீங்க பதிவரா....?உறவினரா...?நண்பரா...?எனக்கு ஒன்னும் புரியலை அப்படிங்கிறார்...!


அதுக்கு ஹோட்டல் காரர் என்ன சொன்னார் தெரியுமா...?

ஒன்னுமில்ல தம்பி நேத்து வச்ச சாம்பார் கெட்டிருச்சுன்னு பசங்க சொன்னாங்க....!நான் நம்பலை....!உங்களுக்கு குடித்து டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன் நீங்க ஒன்னுமே சொல்லலை அப்ப சாம்பார் கெடலைன்னுதானே அர்த்தம்...!இனி நான் எல்லாருக்கும் கொடுக்கலாமில்ல அப்படினாரு...!ஹோட்டல்காரர்...!
நீதி : இலவசமா கிடைக்கின்ற எந்த பொருளுமே....!நம்மிடம் எதாவது எதிர்பார்த்தே வழங்கப்படுகின்றது!
________________________________________


Posted by: 

சின்ன (வீடு சுரேஷ்) குஜாலானந்தா சுவாமிகள்!
_____________________________________________

இந்த தொடரின் வெற்றியை பொறுத்து பட்டிக்காட்டான் கதைகள் புத்தகமாக வெளியிடப்படும் என்பதை அஸ்க்க லஸ்க்குடன் கூறிக்கொள்கிறோம்.
_____________________________________________________


Wednesday, December 5, 2012

கேபிள் சங்கர் - சிரிப்பு மலர்



                                                           

மெரினாவில் மேற்கண்ட போஸில் படுத்த வண்ணம் கேபிள்:

'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே.

ராம்கி தொழிலாளி: அதெல்லாம் சர்தான். தரைய பெருக்கணும். கொஞ்சம் ஒத்திப்போய் படுங்க இல்ல பாடுங்க.
......................................................................

சிட்டிக்காட்டான்: அண்ணே உங்க படத்துல செகன்ட் ஹீரோ சான்ஸ் ஆவது எனக்கு தாங்கண்ணே.

கேபிள்: ஒரு செகன்ட் வந்துட்டு போற மாதிரி வேணா சான்ஸ் தர்றேன்.

சிட்டி: சான்சே இல்லண்ணே.

கேபிள்: நாந்தாய்யா டைரக்டர். உனக்கு சான்ஸ் இருக்கு.
.....................................................................

கேபிள்: தலைவரே 'ஒரேய்  ஓமக்குச்சி' தெலுங்கு படம் போலாமா?

கே.ஆர்.பி: (கொல்றாறே மனுஷன்) போ...லா......ம் தலைவரே

கேபிள்: அப்பறம் நாளைக்கி தலைவர் கூட மீட்டிங் இருக்கு தலைவரே

கே.ஆர்.பி: போயிடுவோம் தலைவரே. தலைவர் கிட்ட சொல்லிடுங்க.

கேபிள்: எந்த தலைவர் கிட்ட தலைவரே?

கே.ஆர்.பி: போனவாரம் தியேட்டர்ல பாத்த தலைவர்கள்ல ஒரு தலைவரை பாத்தோமே அந்த தலைவர்தான் தலைவரே.

கேபிள்: ஓக்கே தலைவரே.
...................................................................

கேபிள் மொபைலில் 'நக்கீரன் காலிங்'. பார்த்ததில் இருந்து அடுத்த ஆறு மணி நேரம் விடாமல் லூஸ் மோஷன் போகிறார். விடுவாரா நக்ஸ் மாமா. தொடர்ந்து மிஸ்ட் கால் தருகிறார். 

கேபிள்: வணக்கம் தலைவரே. சொல்லுங்க.

நக்கீரன்: கேபிள் பக்கத்து வீட்டு பாப்பாவுக்கு நாளைக்கி பொறந்த நாள். கம்மி ரேட்ல பொம்ம வாங்கணும். ரங்கநாதன் தெருவுல எங்க கெடைக்கும்?

கேபிள்: (என்ன பாத்தா அவ்ளோ காமடியாவா இருக்கு) யோவ். இது உனக்கே ஓவரா தெரியல???  உங்க ஊர்லய வாங்கிக்க.

நக்கீரன் சென்டிமென்ட் ஜூஸை பிழிகிறார். கேபிள் இளகுகிறார்.

கேபிள்: காசே செலவு பண்ணாம சூப்பர் பொம்ம உங்க ஊர்லையே இருக்கு.

நக்கீரன்: சீக்கிரம் சொல்லுங்க. சீக்கிரம்.

கேபிள்: பேசாம நீங்களே அந்த வீட்டு வாசல்ல 4 நாள் உக்காந்துக்கங்க. அந்த கொழந்தைக்கு இதுதான் பெஸ்ட் கிப்ட்.
.................................................................    

கேபிள்: கேட்டால் கிடைக்கும் குழுமத்திற்கு சட்ட ஆலோசகர் தேவை.

சிட்டிக்காட்டான்: அண்ணே....எங்க ஏரியாவுக்கே நாந்தான் சட்ட ஆலோசகர். கல்யாணம், காதுகுத்து, கட்டப்பஞ்சாயத்து இப்படி எல்லாத்துக்கும் எந்த கலர் சட்ட போட்டா நல்லா இருக்கும்னு ஆலோசனை சொல்றவன். என்னையே சட்ட ஆலோசகரா போடுங்கண்ணே.

கேபிள்: %^%உ##$#ர% 
.....................................................................

கேபிள்: நேத்தி ஒரு ஹோட்டல்ல சாப்புட்டேன். டிவைன் தலைவா டிவைன்.

சிட்டிகாட்டான்: இனிமே என்கூட பேசாதீங்கண்ணே.

கேபிள்: ஏன்யா. நீயும் மூக்கு பிடிக்க தின்ன. நாந்தான் பில் கட்டுனேன். அப்பறம் எதுக்கு முறுக்கிக்கற?

சிட்டி: போங்கண்ணே. நீங்க மட்டும் அந்த 'டி' Wine ஐ  குடிச்சிருக்கீங்க. எனக்கு தரவே இல்லையே???????           

கேபிள்: %$^கே$%%#@#
......................................................................

சிட்டி: அண்ணே... நாளைக்கு நான் பாரின் போறேன்.

கேபிள்: எந்த நாட்டுக்கு?

சிட்டி: ஏதோ அகமதாபாத்னு சொன்னாய்ங்க. நல்ல சூட்டிங் ஸ்பாட் அங்க இருந்தா சொல்லுங்க. 

கேபிள்: (10 டப்பா அமருதாஞ்சனை தலையில் தடவி விட்டு). எதுக்கு படமெடுக்க போறியா?    

சிட்டி: இல்லண்ணே. அங்க ப்ரென்ட் ரிசப்சன். அவன்தான் நல்ல Suiting ஸ்பாட் போயி ட்ரெஸ் வாங்கிக்க. நான் காசு தர்றேன்னு சொன்னான். ரேமன்ட் ஷோ ரூம் அங்கன இருக்கா?

கேபிள்: %^%1#$$$&*()
..............................................................
    
கேபிளின் என்டர்(ர்ர்) கவிதை: 

10000 பேர் வந்து செல்லும் ரங்கநாதன் தெருவில் 
உனது அசைவின் ஒவ்வொரு பதிவும் 
எனக்கு அத்துப்படி.
என்னை கண்டுகொள்ளாமல் எவ்வளவு நேரமானாலும் 
நீ அவள் விகடன் படி.
அத்தனை பேர் சப்தத்திலும் உனது உதடசைவு 
எனது நெஞ்சினில் பதியும்.
ஜெயச்சந்திரன், சரவணா எங்கு சென்றாலும் 
உன்னை துரத்தும் எனது விதியும்.
அதெப்படி சாத்தியம் என நீ கேட்கலாம்.
முற்றிலும் சத்தியம் என்று நான் உரைக்கலாம்.

ஏனெனில்...........
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அங்கிருக்கும் அனைத்து CCTV யையும் கண்ட்ரோல் செய்வதே நான்தானே என் பொன்மானே. என்னை புறக்கணிக்கும் ஒவ்வொரு நொடியும் உனக்கு வீணே!! 
..................................................................

Posted by:

! சிவகுமார்! 

Cable Sankar Image Copyright:
goundamanifans.blogspot.in

               

Tuesday, December 4, 2012

ஏடு திருப்பல் ஏகன் சுமார் - மெகாத்தொடர்



விளிம்பு நிலையின் மறுபக்கம்.

               
பயங்கர திருப்பங்கள் நிறைந்த அதிரடி மெகாத்தொடர். வெகு விரைவில்...


கதை
திரைக்கதை
வசனம்
இயக்கம்
போஸ்ட் ப்ரொடக்சன்
நடனம்
பாடல்கள்
பின்னணி குரல்
எடிட்டிங்
மக்கள் தொடர்பு

ஏடு திருப்பல் ஏகன் சுமார்.

*******                            ***********************************           *************




                                               

Thursday, November 29, 2012

காடுதிரும்பல் - பாகன் டமார் பயோடேட்டா



                                                                 

பெயர்: அய்யா GOD

தொழில்: இந்தியாவை வல்லரசாக்க டெய்லி பதிவு போடுதல். சில சமயம் 2,3.

சைடு தொழில்: தினம் 101 பேருக்கு கமன்ட், லைக், ஓட்டு போடுதல்.

ரோல் மாடல்: சி.பி. செமதில் டமார்

பிடித்தவர்கள்: (பாராட்டி மட்டும்) கமன்ட் & த.ம.வில் ஓட்டு போடுவோர்

எதிரிகள்: (அ)நியாயமாக தன்னை விமர்சிக்கும் அனைவரும்.

பொழுதுபோக்கு: பதிவு போடவே நேரமில்லை. இது வேறயா?


பலம்: 6 முதல் 60 வரை(குறிப்பாக குடும்ப பெண்கள்) நித்தம் 3,000+ பேர் இவர் பதிவை 'படிப்பது',

பலவீனம்: பிரபல கூகிள் ப்ளஸ்ஸர்கள் ஓட்டினால் பம்முவது.  இளம் பதிவர்கள் கலாய்த்தால் மட்டும் கொதித்து பதில் சொல்வது. 

நீண்டகால சாதனை: பிரபல திரட்டியில் அனைவரையும் ஓரம் கட்டி மாதக் கணக்கில் சிம்மாசனத்தில் இருப்பது, ஆண்டுக்கணக்கில் பயணக்கட்டுரை எனும் பெயரில் ஒவ்வொரு பதிவிலும் 100 போட்டோ, 30 வீடியோ போட்டது. 

சமீபத்திய சாதனை: முதல் இடத்திற்கு ஆபத்து வராமல் இருக்க அடிக்கடி சினிமா பதிவுகளை போட்டு தப்பிப்பது, மடிப்பாக்கம் துர்கா பவன் பதிவு, பயணக்கட்டுரையை ஒருவழியாக முடித்தது, வெள்ளிக்கிழமை பட முன்னோட்டம் போடுதல், பாடல் விமர்சனம்.

தனிச்சிறப்பு: டி.வி. நிகழ்ச்சிகள் பற்றி தொடர்ந்து எழுதுதல், விசேஷ தினங்களில் டி.வி.யில் என்ன பார்க்கலாம் என்று யோசனை சொல்லுதல், மறுநாள் அதுகுறித்த விமர்சனங்கள் போட்டு திகிலை கிளப்புதல், நாளுக்கு 40 ரூவாய் சம்பாதிக்கும் கூலித்தொழிலாளிகளை இம்சித்து பேட்டி எடுத்து அவர்கள் வருமானத்தை வறுத்து எடுத்தல்.

ஸ்பெஷல் சிறப்பு: சோகத்தில் ரோட்டோரம் நடந்து செல்லும் அப்பாவியை வலுக்கட்டாயமாக அழைத்து தன்னை பலவித ஸ்டில் எடுக்க சொல்லி வெறுப்பேற்றுவது.

மிகச்சிறப்பு: பதிவுலகில் இவரை தெரியாதவர்கள்  யாருமில்லை, இவருக்கு தெரியாதவர்களும் யாருமில்லை. இல்லை. இல்லையோ இல்லை.

முக்கிய சிறப்பு: பயணக்கட்டுரை மூலம் கூகிள் மேப்பின் இன்கமை காலி செய்தது. 'இனி எங்க டூர் போனாலும் உங்க பதிவை மேப்பா வச்சித்தான் போவோம்' என்று தென்கிழக்கு ரஷ்யா முதல் வடமேற்கு சிம்லா வரை உள்ள வாசகர்கள் பாராட்டுவது. 

வெற்றியின் ரகசியம்: பதிவு போடும்போது டைட்டிலின்  பின்பாதியில் அதிரடியாக வார்த்தைகள் வைத்து வாசகர்களை உள்ளே இழுப்பது. உதாரணம்: அரிய/அறியாத தகவல்கள், மறக்க முடியாத நினைவுகள், அசத்தல் படங்கள்.
     
நீண்ட கால எரிச்சல்: 'செம' எனும் வார்த்தையை தவிர்க்க முடியாமல் தவிப்பது. 

சமீபத்திய எரிச்சல்: ரேங்கிங்கில் தொடர்ந்து தனக்கு மிக அருகில் இருப்பவர்கள், குறுகிய காலத்தில் தன்னை விட பிரபலம் ஆகிவிட்ட சகலகலா சிட்டிக்காட்டான்(விரைவில் சிட்டியை போட்டுத்தள்ள ஆட்கள் தேவை விளம்பரம் தர முடிவு).

லட்சியம்: அடுத்த ஆண்டும் 365+(730?) பதிவுகள் போட்டு நெம்பர் ஒன் ஆகுதல்.


*******                                          ************************                  **************
      

Saturday, November 24, 2012

சிட்டிக்காட்டான் - சிரிப்பு மலர்



                                                           

சகலகலா பதிவர் சிட்டிக்காட்டான் சிரிப்பு வெடிகளை கண்டு வகுறு குலுங்க சிரிக்கப்போகும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்:

உஸ்மான் சாலையில்..

நக்கீரன்: யோவ்..அறிவு இல்ல? இவ்ளோ ஸ்பீடா வந்து மோதுற? என்னைய்யா வண்டி ஓட்டற நீ?

சிட்டி: ஸ்ப்லென்டருங்க.
...............................................  

டிங் டாங் பட்டி ஆலமரத்தடி...       

நாட்டாமை அஞ்சாசிங்கம் : எலேய் சிட்டிக்காட்டான் என்றா?

சிட்டி: 1 2 3 4 5 6 7 8........
..............................................

அவ்வையார் ஆரம்ப பாட சாலை LKG சேர்க்கை க்யூவில்.....

சிட்டி:  பசங்களோட LKG சீட்டுக்கு 1 லட்சம் கேக்கறாங்க பாவிங்க?

பிலாசபி:  ஆமாங்க. என் பையனை 2015 ல சேக்க ஒரு சீட் கேட்டேன். 5 லட்சம் கேக்கறாங்க லவ$%$த&*7

சிட்டி: எனக்கு தெரிஞ்ச பர்னிச்சர் கடைல பர்மா தேக்குல செஞ்ச சீட்டே 30,000 தானுங்க. இங்க ரொம்ப அநியாயமுங்க?

பிலாசபி: தக்%$%####.    
.........................................................

பிட்சா கார்னரில்..

சிட்டி: எக்ஸ் யூஸ் மீ. பிட்சா இங்கன எப்படி?

வீடு சுரேஸ்: 250, 300, 450. இப்படி நிறைய இருக்கு. உங்களுக்கு என்ன வேணும் சார்?

சிட்டி: நான் என்ன தீனிப்பண்டாரமா? ஒன்னே ஒன்னு குடுய்யா. 
.........................................................

திருவாரூர் கோயிலில்....

ஆரூர் முனா: யோவ்..எதுக்குய்யா துள்ளி குதிச்சி சாமி கும்புடற?

சிட்டி: அப்பதான் நான் சிறந்த பக்தி'மான்' ஆவேன்னு நித்தி சொன்னாப்ல.
.........................................................

இயக்குனர் சங்கர் அலுவலக வாசலில் சான்ஸ் கேட்டு காத்திருந்த 100 பேரை தாண்டி ஒரு வழியாக உள்ளே நுழைகிறார் சிட்டி.

சிட்டி: சங்கர் சார் வர சொன்னாப்டி. ஜெய்னு சொன்னா தெரியும்.

மேனேஜர் மதுமதி: அப்படியா? இருங்க அவருக்கு கால் பண்றேன்.

சில நொடிகளுக்கு பின்பு..

மேனேஜர் மதுமதி: இந்தாங்க போன். கொஞ்ச நேரம் லைன்ல இருங்க. சார் பேசப்போறார்.  

சிட்டி: சரிங்க.

மீண்டும் லைனில் பின் போய் நிற்கிறார்.
.............................................................

போலீஸ் ஸ்டேஷனில்...

சிட்டி: சார். நான் ஒரு சமூக வலைத்தள ஓனர். ஒரு சின்ன டவுட்டுங்க.

எஸ்.ஐ. கே.ஆர்.பி.: கேளுங்க.   

சிட்டி: முதல்ல நான் சொல்றதை கேளுங்க சார்.

எஸ்.ஐ. கே.ஆர்.பி: அதத்தான்யா சொன்னேன். டவுட்டை கேளுய்யா.

சிட்டி: சார். போன வாரம் நீங்க ஒருத்தர் கிட்ட 1,000 ரூவா கில்மா வாங்குனதை போட்டோ பிடிச்சி பேஸ்புக்ல போட்டேன். அதை டெலிட் பண்ண ட்ரை பண்றேன். ரொம்ப கஷ்டமா இருக்கும். அது வரைக்கும் எனக்கு சிறப்பு பாதுகாப்பு வேணும். அதுக்கு என்ன செய்யணும்?
.................................................................

புலன் விசாரணையில்....

கேப்டன் சீனு: இந்த கொலைய நேர்ல பாத்த சாட்சியை கொண்டு வாங்க.

சாட்சி சிட்டி ஆஜர்.

கேப்டன் சீனு: ம்ம்...உண்மைய சொல்லுங்க. இல்ல கடிச்சி துப்பிடுவேன்.

சிட்டி: ஐயோ சாமி. நான் கொலைய நேர்ல பாக்கலீங். சைடு வாக்கா இருந்து தானுங்க பாத்தேனுங்.
........................................................





Friday, November 9, 2012

பயோடேட்டா : விமர்சனம்....

பெயர்                                  :விமர்சனம்
இயற்பெயர்                        : கருத்து சுதந்திரம்
தலைவர்கள்                      : பிரபலங்கள், அரசியல்வாதிகள்
துணைத் தலைவர்கள்      : புரட்சி எழுத்தாளர்கள்
மேலும்
துணைத் தலைவர்கள்    : ஊடக தாதாக்கள்
வயது                                : இன்னும் வயதுக்கு வரவில்லை
தொழில்                         : பிடிக்கலைன்னா மட்டும் சொல்வது
பலம்                                 : சட்டம் தன் கடமையை செய்யும்
பலவீனம்                          : கட்டற்ற இணைய சுதந்திரம்
நீண்ட கால சாதனைகள் : மேடை போட்டு என்ன வேனுன்னாலும் பேசலாம்
சமீபத்திய சாதனைகள்   : கருத்து சொன்னா உள்ளே தள்ளுவது
நீண்ட கால எரிச்சல்         : ஜனநாயகம்
சமீபத்திய எரிச்சல்          : ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் பதிவுலகம்
மக்கள்                                : அரசியல் கட்சி மற்றும் ரசிகர் மன்ற உறுப்பினர்கள்
சொத்து மதிப்பு                :  பதவியில் இருப்பது அல்லது அவர்களின் உறவினர்களாக இருப்பது
நண்பர்கள்                          : ஸ்க்ரீன் சாட் எடுப்பவர்கள்
எதிரிகள்                            : பெயிலில் எடுப்பவர்கள்
ஆசை                                : எவனும் வாயை திறக்கக்கூடாது
நிராசை                              : இனி யாரையும் கட்டுப்படுத்த முடியாது
பாராட்டுக்குரியது            : ?????????????????
பயம்                                 : எல்லோரும் கேஜ்ரிவாலாக மாறிக்கொண்டிருப்பது
கோபம்                             : சவுக்கு.......
காணாமல் போனவை  : சகிப்புத்தன்மை
புதியவை                        :  ”கருத்து”ன்னு ஒரு இயக்கம் ஆரம்பித்த கார்த்தி சிதம்பரமே
                                            கருத்து சொன்ன ஒருத்தர் மேல வழக்கு போட்டது
கருத்து                             : கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தனி மனித தாக்குதல்களை
                                            செய்வதுதான் பிரச்சினைகளை உருவாக்குகிறது.
டிஸ்கி                              : சாரு, ஜெமோ போன்ற எழுத்து அரசியல்வாதிகளின்
                                           முகமூடி கிழிந்தது!

Wednesday, October 10, 2012

வெள்ளை இட்லி - அதிரடி அறிமுகம்



                                      வெண்ணிட்லியை தேடி ஒரு வெ(ற்)றிப்பயணம்

உணவு மற்றும் சாப்பாட்டிற்கான எனது தேடல் எப்போதும் பலப்பல பற்பல சுவாரஸ்யங்களால் நிறைந்து இருக்கும் என்பது இந்திய துணைக்கண்ட வாசகர்கள் நான்கு பேரும் நன்கு அறிந்ததே. இதுவரை நான் சென்ற அனைத்து கடைகளிலும் இட்லியை வட்டமாகவும், வெள்ளையாகவும் தந்தே வெறுப்பேற்றியதால் இம்முறை காஞ்சியில் எப்படியேனும் வித்யாச, மான முறையில் ஒரு இட்லியை குழைத்து அடித்து தங்கள் தூக்கத்தை குலைத்து பதிவிட முடிவு செய்தேன். 

                                                         

நான் கால்களால் நடந்து சென்ற வழியில் கண்ணில் பட்டது அதிசயம் passed புட். அகால மரணம் அடைந்த உணவிற்கு அதிசயம் என்று பெயர் வைத்து விற்பனை செய்வதா? எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும் அவனுக்கு. பேரன்பை கிடப்பில் போட்டுவிட்டு பெருங்கோபத்துடன் அந்த கடைக்குள் நுழைந்தேன். பிறகென்ன...அவன் என்னை அடிக்க, என்னை அவன் அடிக்க...ரெண்டு பேருக்கும் செம சண்ட. 'நா பாட்டுக்கு எண்ணறேன். நீ பாட்டுக்கு அடி' என்று கூறியதால் டயர்ட் ஆகி விட்டு விட்டான். நடக்குமா? தேக்குல செஞ்ச உடம்புலே!!                          
       

                                           
காஞ்சி பஸ் ஸ்டாண்ட் அருகே போனவாரம் வரை அமோக இட்லி வியாபாரம் செய்து கொண்டிருந்த ஓனர் என்னை கண்டதும் ஓட்டம் பிடித்தார். விரட்டி பிடித்து 'அண்ணே..உங்க ஓட்டலை பத்தி பெருமையா எழுதி இருந்தனே? இப்ப எப்படி போகுது யாவாரம்?' என்றேன். 'நாலு ஓசி இட்லி, ரெண்டு பக்கெட் சாம்பார் சாப்புட்டதோட போக வேண்டியதுதான? எவன்யா எழுத சொன்னது? லெப்டுல கீழ பாரு. பிசினெஸ் வயித்தால போயி இப்ப பிளாட்பாரத்ல இட்லி குண்டா சொப்பு விக்கிற கடை வக்கிற நிலைக்கு ஆயிட்டேன்யா' எனக்கதறினார். உங்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டுமெனில் எனக்கு 'பொன்னான வாழ்வே மண்ணாகி போச்சே..துயரம் இதுதானா' டைப்பில் ஒரே ஒரு பேட்டி மட்டும் தாருங்கள். ஓரிரவில் அதிசயம் நிகழும்' என்றதற்கு அதீத மௌனத்துடன் சில நொடிகள் இருந்துவிட்டு கணுக்காலில் விழுந்து 'ஒழுங்கா போயிரு. இடுப்ப ஒடிச்சி அடுப்புல சொருகிறுவேன்' என கூக்குரலிட்டு கண்ணீர் மழை பொழிந்தார். அந்தோ பாவம். மன்னித்து விட்டேன். மீண்டும் ஒயிட் கேக் (தட் மீன்ஸ் இட்லி) தேடல் தொடர்ந்தது.             
 
                                                               
வெள்ளைநிற ரவுண்டு இட்லி கடைக்கு வேகமாக செல்ல காஞ்சியில் இருந்த காஞ்சி ஆட்டோக்காரனிடம் பேரம் பேசினேன். அவன் தி.மு.க.காரன் என்பதால் 'இன்னா நெக்குலு இருந்தா வெள்ள இட்லி துன்ன ஆசைப்படுவ. அகுலு அவுலு வுட்டுக்கும். கட்சியோட 'புது கை' புதுகை அப்து அண்ணன் சொல்லிக்கீறாரு. இன்னும் ஒரு வருசத்துக்கு கறுப்பு இட்லிதான் துன்னனுமாம். அதை விக்கிறது நம்ம ஆளுதான். வரியா இட்டுனு போறேன்?'....அண்ணா பிறந்த பூமில அகராதி புடிச்ச பய புள்ளைக..!!     

                                                             
'ஏற்றுக்கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையை தந்தார். தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் லம்ப்பாக சொத்தினை தந்தார்' எனும் கலைஞர் ரீமிக்ஸ் பாடலை கேட்டவாறு கால்களால் நடந்து (ஹோட்டல்) சங்கீதாவை அடைந்தேன். காஞ்சி சங்கீதாவில் 'பெண் சப்ளையர்கள்' நிறைய உண்டு என்பதால் அங்கே உண்டு மகிழ முன்பே முடிவு செய்தேன்(ஆதாரம்: மேலே இருக்கும் படம்). 'என்ன சார் வேணும்?' என்று ஒரு ஆண் வந்து கேட்க மெல்லிய குரலில் 'பெண் சப்ளையரை வர சொல்லுங்க' என்று கிசுகிசுத்தேன். அவரோ மூர்க்கமாக 'கிசு கிசு பேசுறது தேன் மாதிரி இருக்கும் உனக்கு. பெண் சப்ளையர் உலவும் இடமென இதை நினைப்பது எதற்கு.' என எகிறலானார். அதிர்ந்த நான் 'உஸ்ஸு...உஸ்ஸு...ஏன் இவ்ளோ சத்தமா? பெண் சர்வர் இருக்காங்களான்னுதானே கேட்டேன்.நீங்க ஏன் தப்பா?'என ஆசுவாசப்'படுத்தினேன்'. இப்போதுதான் அந்த ட்யூப்லைட் பிரகாசமாக எரிந்தது.  

சில வெள்ளை இட்லிகள், வெள்ளை நிற தேங்காய் சட்னி, பச்சை வண்ண புதினா சட்னி, சூடான சாம்பார் நிறைந்த தட்டை டேபிளில் 'டொக்'கென வைத்து விட்டு டக்கென மறைந்து விட்டாள் அந்த பாவை. அடச்சே.... இங்கேயும் வட்ட வடிவ இட்லியா? வந்த  கோபத்திற்கு சென்ற அவளை அழைத்தேன்.

 'இட்லி வேண்டாம். சோலோ பூரி கொண்டு வாங்க'

'காலைல சோலோ பூரி எல்லாம் கிடைக்காது. பூரி செட்ல கொறஞ்சது ரெண்டு, மூணு பூரி இருக்கும். ஒரு சோலோ பூரி வாங்குனாலும் அதே பில்தான்'

'யார ஏமாத்தற. எத்தன ஓட்டல்ல லஞ்சுக்கு சோலோ பூரி தின்னுருப்பேன். பொம்பளையாச்சேன்னு 'பாக்கறேன்'. 

'அதான் வந்ததுல இருந்து பாக்கறியே. கண்ணுல காராபூந்திய வச்சி அடைக்க. யோவ் நீ சொல்லுறது சோலா பூரி. அது சோலோவா கெடைக்கும்.  காலைல போடுறது சின்ன பூரி'

'சோலோ..சோலா ..ம்ம். விடு. 'லோ' 'லா' வித்தியாசம்தான. லோலாயி மாதிரி அதுக்கு போயி ஏன் கத்தற? பசிக்குது. மணியோ பத்தற. என்ன விட்டுட்டு வேற டேபிளாண்டா ஏன் ரொம்ப நேரமா சுத்தற?'

'அட..நீங்க கவிஞரா?'

(நம்ம அருவாள சும்மாக்கண்டிதான் வச்சிருக்கோம்னு கண்டுபுடிச்சிட்டாளே).

'டெபனெட்லி. டெபனெட்லி'

'எத்தன பூரி வேணும்னாலும் துன்னுய்யா..காசு வோணாம்'

'ஏன்? இல்ல ஏன்னு கேக்கறேன்'

'ஏன்னா..ஏன்னா...'

'சொல்ரி கள்ளி'

'ஏன்னா....... நீதான்யா என் தேன்ன்ன்னன் அட!!'                
                                                               
                                               ஓட்டல் சங்கீதா கால் துடைப்பான்

சென்னை (ஓட்டல்) சங்கீதாவுடன் மீண்டும் சந்திப்போம்.


ஆக்கம், நெறியாள்கை மற்றும் (ரோல்) மாடல்:
கே.ஆர்.பி.செந்தில்
.....................................................................................




Monday, September 17, 2012

Chikubuku.com - Vadivelu Comedy Scene - Part 34

Wednesday, September 12, 2012

பிரிக்கப்பிறந்தவன் - பக்கி லுக்கின் சொத்தை விளையாட்டு!!


                                                                   

G + இல் தோழர். யுவகிருஷ்ணா சொன்னது :-



// செல்வின் தம்பி, நம்ம நக்ஸ் பாப்பாவை அம்மணப்படுத்தி அழவுட்டிருக்கிறோம். நீ பாட்டுக்கு என்னவோ நக்ஸு பூந்து விளையாடினா மாதிரி பில்டப் கொடுத்துக்கினுக்கிறே.



நக்ஸோட ட்ரிக்கே இதான். இதோ வர்றேன். இதோ வந்துட்டேன். வந்துக்கினேக்கீறேன் பீலாவுட்டே எல்லாத்தையும் மெர்சல் பண்ணி வெச்சிருக்கு.


அந்த ட்ரிக்கு நம்பளாண்டே வேலைக்கு ஆவாது. மொத்த துணியையும் கயட்டி அம்மணப்படுத்தி இந்தமாதிரி நாலு வாட்டி அழ வுட்டோம்னா மூட வேண்டியதை எல்லாம் மூடிக்கிட்டு கிடக்கும்.


தம்பீங்களா, உங்க அக்கறையாலேதான் சொல்றேன். நீங்கள்லாம் ரொம்ப கலீஜி ஆனது அந்த டயப்பர் வாயனாலதான்னு நினைக்கிறேன். டயப்பர் பய ஒரு லெக் தாதா. அந்த பயலும் உருப்பட மாட்டாப்புளே. கூட இருக்குறவனுகளையும் உருப்பட விட மாட்டாப்புளே. வினயம் புடிச்ச பய. பேட் வைப்ரேஷன் இருக்குற ஆளு. மூஞ்சியையும், வாயையும் உற்றுப் பார்த்தாலே உங்களுக்கு தெரியுமே?


பிலாஸபியும், ஆரூரும் நல்லா எழுதறாங்கன்னு ஒரு ப்ளஸ்ஸு வுட்டுட்டேன். அவ்ளோதான். டயப்பருக்கு பேதி புடுங்கிடிச்சி. நம்பளை வுட நம்ப கூட இருக்குறவனுங்க நல்லா எழுதறாங்கன்னு ஒருத்தன் சொல்லிட்டானேன்னு என் மேலே வஞ்சம் வெச்சிக்கிட்டு திரியறான். அந்த வஞ்சத்துக்கு தேவையில்லாமே நீங்கள்லாம் ஏன் பலிகடா ஆவுறீங்க? வளரவேண்டிய பசங்க. நல்லா வளருங்க. இந்த டயப்பரு வாயன் மாதிரி பேட் ஃபெலோஸ் கூட சேர்ந்து நீங்கள்லாம் கெட்டுப் போயிடாதீங்க....//



அண்ணாத்தைக்கு பதில்: 


 1. வெள்ளைக்காரன் டெக்னிக் - பிரித்தாளும் சூழ்ச்சி - நானோ ஆரூர் மூனா செந்திலோ உங்களுடைய நைந்துபோன வலையில் சிக்கிவிடுவோம் என்று நீங்கள் எண்ணியது வேடிக்கையாக இருக்கிறது.



2. மூஞ்சியை பாரு, வாய் டயப்பர் ஷேப்பிலே இருக்கு போன்ற தனி மனித தாக்குதல் பதங்கள் தான் உங்களுடைய ஏழு வருட பதிவுலக பாரம்பரியமா...?



3. ஆமாம், நானோ அல்லது சகாக்களோ சிறுபிள்ளைத்தனமாகவோ சில சமயங்களில் அநாகரிகமாகவோ நடந்திருக்கலாம். ஆனால் சும்மா ரோட்டுல போற வர்றவங்கள கூப்பிட்டு சொறிய வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. முதலில் யார் சீண்டியது என்பது பதிவுலக நட்டநடு சென்டர்களுக்கே வெளிச்சம்.


பதிவர் சந்திப்பில் யாரும் மகிழ்ந்து பேசக்கூடாது, நண்பர்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது போன்ற உயர்ந்த கொள்கை...சூப்பர் அப்பு.

எச்சரிக்கை: 
ஆண் பதிவர்களின் அங்கங்களை 'அவனா நீ'? போல் அண்ணாத்தை வர்ணிப்பது பயமாக உள்ளது. உங்கள் மூக்கு ஸ்ரீ தேவி போல் உள்ளது என்று அஞ்சா சிங்கத்தை பார்த்து சமீபத்தில் வர்ணித்து இருக்கிறார். பார்த்து  நண்பர்களே அனைவரும் உஷாராய் இருக்கவும்.எசகு பிசகாக ஏதேனும் செய்து விடப்போகிறார்.    

நண்பர்களை பிரிக்கும் சொத்தை விளையாட்டு எங்களிடம் வேகாததால் வேறு கூடாரம் நோக்கி செல்லவும் தோழர்!! குறிப்பாக காமடி நடிகர் செந்தில் ஒரு படத்தில் சொல்வது போல "பதனி பதனி" என்று கூவிக்கொண்டே செல்லவும்.



இப்படிக்கு,

பிலாசபி பிரபாகரன்,
ஆரூர் முனா செந்தில். 
சிவகுமார் 
அஞ்சாசிங்கம்   
________________________________________________________

  


Sunday, September 9, 2012

'கலக' டயப்பர், பைலட் பாதுஷா - தொடர் வயிற்று போக்கு..!!



       
சமீபத்திய பதிவர் சந்திப்பிற்கு முன்பு வரை டமில்   னத்தலைக்கு ஜால்ரா அடிப்பதை மட்டுமே பிழைப்பாக கொண்ட  'கலக' டயப்பர் யுவகிச்சாவும், பைலட் தியேட்டரில் மட்டுமே படம் பார்க்கும் பரம ஏழை அத்திஷாவும் பதிவர் சந்திப்பு நடந்தேறிய வயிற்றெரிச்சலில் இன்றுவரை தொடர் பேதியால் அவஸ்தை பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் பாவம். கடந்த இரு வாரங்களாக பல்வேறு சந்துகளில் சாணியடி வாங்கியும் எரிச்சல் அடங்காமல் திண்டுக்கல் தனபாலன் மற்றும் புலவர் அய்யாவை சீண்டும் நிலைக்கு ஆளாகி விட்டனர். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி ஆன நிலைதான் இப்போது. இந்த லட்சணத்தில் இருவருக்கும் எழுத்தாளர்கள் என்று அடைமொழி வேறு(வொர்த் இல்லாத சில  கம்னாட்டிகளுக்கு டாகுட்டர் பட்டம் தர்றப்ப இதெல்லாம் ஒரு அதிசயமா என்பதும் நியாயம்தான்).

நண்பர்களே நீங்கள் என்னதான் மாய்ந்து மாய்ந்து எழுதினாலும் இவர்களைப்போல எழுத்தாளர் ஆவதற்கான சூட்சுமம் கற்றல் அம்புட்டு எளிதல்ல. என்ன செய்யலாம்? அப்படி கேளுங்க!!

கலக டயப்பர் யுவகிச்சா ஆவது இப்படி: 

(கட்சி உறுப்பினர் அட்டை புதுப்பிக்க மறந்த) முன்னாள் கலக டயப்பர்..இந்நாள் புளியங்கொட்டை(அடைமொழி உபயம்: நன்றி அபி டாட்) போல் ஆக சில யோசனைகள்:

* ஆகச்சிறந்த, அவதானிப்பு, பாடாவதி போன்ற சொற்களை அடிக்கடி எழுதி மொக்கைப்பதிவு போடும் போர்வாள்...மன்னிக்க. Bore வால் ஆக இருத்தல் வேண்டும்.

* நீங்க நல்லா வருவீங்க தம்பி. ரத்னா கபேல ரெண்டு இட்லி, கொஞ்சம் புளிச்ச சட்னி. காசு நீ தந்துரு ராசா' என்று புது பதிவர்களை ஊக்குவிக்க வேண்டும்.  

*தனக்கு பொன்னாடை/பன்னாடை போர்த்தும் விழாக்களை தவிர மற்ற அனைத்து சந்திப்புகளையும் ராக்கிங் செய்ய வேண்டும். அப்பகடியை எவருமே சீந்தவில்லை என்றால் 'உங்களுக்கு காமடி வரல தோழர்' என்று கிச்சு கிச்சு மூட்ட வேண்டும்.

*பதிவர் சங்கம் வைத்தால் கட்டப்பஞ்சாயத்து நடக்கும் என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நாஸ்டர்டாமின் நாத்தனார் மகன் போல 'பதிவர் சங்கம் வைத்தால் பூகம்பம் வெடிக்கும்' என்று ஆருடம் சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்துகொண்டே இருக்க வேண்டும். அதேசமயம் கவர்ச்சிப்பட கட்டைகள் பற்றிய பஞ்சாயத்து பதிவுகளை எழுத வேண்டும். 

அண்ணாத்தையை  குளிர்விக்க என்ன செய்யலாம்:

கழக/கலக பிரச்சாரம் செய்யும் வேலையை விட்டு விட்டு இரண்டு வாரமாக பதிவர் சந்திப்பு பற்றிய அதிரடி(??) செய்திகளையே தாங்கி வரும் பிரதரின்  உபாதையை தீர்க்க மின்பதிவுகள் பயன்படாது(ஷாக் அடிக்கும். உதாரணம்:மேற்கண்ட படம்) பகுமானமாக பட்டினால் நெய்யப்பட்ட ஐம்பது டயப்பர்களை அண்ணா அறிவாலயம் அருகில் இருக்கும் கோ ஆப் டெக்ஸில் (வானவில் பஸ் ஸ்டாப்) வாங்கி பரிசளிக்கலாம்.    
  
குறிப்பு:
மிஸ்டர் உ.பி...உங்கள் தலைவருக்கு லாபிங் தெரப்பி அவசியம் என்று ஒரிஜினல் டாக்டர் சொல்லி இரண்டு வாரமாகி விட்டது. சீக்கிரம் துருப்பிடித்த கலக கத்தியை சுழற்றும் பிழைப்பை பாருங்கள். நீங்க இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க!! 


பைலட் அத்திஷா ஆவது எப்படி:

* புளியங்கொட்டை எது செய்தாலும் 'ஆமாம் சாமியோ' போட வேண்டும். அதாவது ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும். ஆனா பாத்திரம் மட்டும் பளிச் என்று இருக்க வேண்டும்.

* 'எனக்கு சம்பளம் 910 தான். நான் வறுமைக்கோட்டிற்கு கீழே 500 அடி ஆழத்தில் அகதியாய் இருக்கிறேன். பைலட் தியேட்டரில் 10 ஓவாய் டிக்கட்டில் மட்டுமே படம் பார்ப்பேன்' என்று சென்டிமென்ட் ரசத்தை பிழிந்து ஊற்றி படிப்போர் மனதை கவ்வ வேண்டும். ரசத்தின் கூடுதல் ருசிக்கு புளியங்கொட்டையை அவசியம் சேர்க்க வேண்டும். 

*  விருது கிடைத்தால் நீங்கள் போட வேண்டிய பதிவு(பாதுஷாவின் டிசம்பர் 20 ஆம் தேதி 2011 பதிவை படிக்கவும்) : 

 'செய்யாத தப்புக்கு தண்டனையா? முதல் இரவுக்கு காத்திருக்கும் மாப்பிள்ளை போல(!!) இருந்தேன் அவார்ட் கிடைக்கும் நாளுக்கு முன்பு. முதல் மேடை. முதல் சால்வை. முதல் சரக்கு. முதல் முறுக்கு. அப்படி நான் என்ன செய்து விட்டேன் தோழர்களே? 'இனி நீ நல்ல கட்டுரை எழுத வாய்ப்பே இல்லை. பின்னூட்டமாவது ஒழுங்கா போட்டுத்தொலை' என்று மனசாட்சி கொல்கிறது. அதற்காக அவார்ட் வாங்காமல் இருக்கலாமா?  இல்லன்னா வரலாறு இந்த தருமியின் கொள்ளுப்பேரனை என்ன சொல்லும்? பாவம் நானோ(கார் வாங்கக்கூட முடியாத)  ஏழை நான்!! 

* 'சாப்பாட்ல செங்கல். பதிவர் குழுமம் சார்பா என்கிட்ட சண்டை போட யாருனா வாங்க?' என்று கவுண்டர் போல ஊரை கூட்ட வேண்டும். 'அட போப்பா..சென்னைல பதிவர் சந்திப்பு நடந்தா அதை கலைக்க நீ பண்ற சில்லறை காமடிக்கு சண்டை வேறயா?' என்று எள்ளி நகையாடுவோரை விடாமல் சீண்டி நோண்ட வேண்டும்.    

தொம்பியை குளிர்விக்க என்ன செய்யலாம்:

அமானுஷ்ய புத்திரன் போன்ற ஒளிவட்டங்கள் தரும் விருது போல ஷகிலா, மும்தாஜ் அல்லது அவள் ஒரு தொடர்கதை 'சுஜாதா' பெயரில் எப்படியேனும் ஒரு விருதை கட்சியில் கடைநிலை தொண்டர் ஒருவரிடம் பேரம் பேசி வாங்கித்தரலாம்.    

                                                             
குறிப்பு: 
கால்கிலோ பர்னாலை வாங்கி நித்தம் நான்கு முறை உட்கொள்ளவும். எரிச்சல் அடங்கும். நீங்கள் கூகிள் ப்ளஸ்ஸில்  கலாய்த்ததில் பதிவர்கள் சிலர் கடும் குளிர் காய்ச்சலில் அவதிப்படுவதால் வசந்த மாளிகை ப்ரொட்யூசரிடம் மன்றாடி அழுது சிவாஜி யூஸ் செய்த அதே ரக போர்வைகள் 108 ஐ ஆர்டர் செய்து உள்ளோம். அந்நிகழ்விற்கு தலைமை ஏற்க சேர் ஆட்டோரிக்ஸா போன்ற காஸ்ட்லி வாகனங்களில் பவனி வர வசதி இல்லாத பரப்பிரம்ம ஏழை நீங்கள் என்பதால் 'ஏன்யா..நான் இந்திய நாட்டை சேர்ந்த ஒரு பிரஜை..எனக்கு சைக்கிள் இல்லையா?" என்று உங்கள் ஏரியா சைக்கிள்காரிடம் பேசிப்பார்க்கவும்.

'எனக்கு தெரியாம இந்த ஊர்ல எந்த சந்துலடா இருந்தபைலட் பாதுஷான்னு பேரு வச்சவனுக்கு எல்லாம் சைக்கிள் தர்றதில்லஎன்று ஒருவேளை அவர் வன்முறையை தூண்டினால் உங்கள் இத்துப்போன பஞ்சர் டயலாக்கை பிரயோகப்படுத்தவும்:

"தோழர்....நீங்க இப்படி செஞ்சதே இல்லையா?"

எனக்கு ரெண்டு பேரு மாதிரி ஆகணும் என்று அடம்பிடிக்கும் நண்பர்களுக்கு அத்திஷா தரும் டிப்ஸ்(ஓட்டை காலணா..பாவம் பரம ஏழை):

பதிவுலகில் நடக்கும் தானே உருவாக்கும் பிரச்னைகளை பதிவுகள் மூலமே உரையாட வக்கில்லாமல் கொல்லைப்புறம்(G +) வழியாக வாந்தி எடுக்கவும்.    

* 'சென்னை என்றாலே நாங்கள்தான். சென்ட்ரல் ரயில் நிலையத்தை இனிமே எவனும் ஓப்பனிங் சீன்ல காட்டக்கூடாதுஎன்று திரைப்பட இயக்குனர்களை வம்புக்கு இழுக்கலாம்.   

அடுத்த உள்ளூர் பதிவர் சந்திப்பு வரை சின்னத்தம்பி படத்தில் வரும் கேரக்டர் போல 'எனக்கு கல்யாணம். எனக்கு கல்யாணம்என்று புலம்பிக்கொண்டே இருக்கலாம்.
  
_______________________________________________________________   ________

                                                            

Tuesday, August 28, 2012

சென்னை பதிவர் சந்திப்பு 2012 - ஜாலி பட்டாசுகள் - 2



                             
ஜெய்(பட்டிக்காட்டான்): பதிவர்கள் எழுதுன காவியங்களை எல்லாம்  காசு குடுத்து வாங்க சொல்லி டார்ச்சர் தருவாரோ?

வேடியப்பன்: எழுத்தாள பதிவர்கள் சொல்ல சொன்னதை சொன்னது தப்பா?

                                                            
'கரைசேரா அலை' அரசன்: நான் நிக்கற எடத்துக்கு பக்கத்துல பேனர் வக்க வேணாம்னு சொன்னா கேட்டாத்தான? எனது கண்டனத்தை கறுப்பு சட்டை போட்டு பதிவு செய்கிறேன்.            

                        மூவேந்தர் நக்கீரன், அஞ்சாசிங்கம், சிராஜ். அரிய பொக்கிஷ படமுங்க.                                                         
          
                                                       
                                   நான் போட்ட மொக்கையில் மண்டை காயும் கேபிள்.                        
          
                                             
                                                               
கஸாலி: பதிவுலக 'சோ'ன்னு சொல்றத நிறுத்துறீங்களா. இல்லை வெளிநடப்பு செய்யவா?

பாரூக்: என்னை மேடை ஏத்தி விட்டதுக்கு நானே உன்னை வெளிய அனுப்பறேன்.

.............................................................................

Posted By:
!சிவகுமார்!

........................................................
சமீபத்தில் எழுதியது:

சென்னை பதிவர் சந்திப்பு 2012- மாற்றான் ஸ்பெஷல்

........................................................


Monday, August 27, 2012

சென்னை பதிவர் சந்திப்பு 2012 - ஜாலி பட்டாசுகள்




                                                       
பேட்டரி இல்லாத கேமாரவில் கூட ஒலிம்பிக் போட்டிகள் முழுதும் கவர் செய்யும் சிபியின் அதிசய கேமராவை கொஞ்ச நேரம் பிடுங்கி வைத்த உற்சாகத்தில் வேடந்தாங்கல் கருனும், அஞ்சாசிங்கமும். 

                                             
சுயவேலை வாய்ப்பு திட்டத்தில் ஆஸ்தான போட்டோகிராபராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட மோகன்குமாருடன் தமன்னாவை கலரில் மிஞ்சிய வெள்ளை வெளேர் பதிவர் 'சினிமா சினிமா' ராஜ்.

                                                                
"கேபிள் கவிதை பாடப்போறாரா...இனிமே எப்படிய்யா எனக்கு சோறு இறங்கும்?" - அஞ்சாசிங்கம்.

                                                           
               அடங்கப்பா... இப்படி ஒரு கொழந்தை முகத்தை நான் பாத்தது இல்லை சாமி...


                                                            
 "சிரிப்பு போலீஸ் வலைப்பூல ஏகப்பட்ட இதிகாச, புராண, காவியங்கள் படைச்ச மகான் நீங்கதானா?"

                                              
இரவு முழுக்க ஆரூர் முனாவின் காதை 'கடித்து' துப்பிவிட்டு விழா நடந்த சமயம் மணமகன் அறையில் தூங்கிய நாய் நக்ஸ் நக்கீரன் மாமா.  
.................................................................

Posted by:
!சிவகுமார்!

.........................................................

சமீபத்தில் எழுதியது: